/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தமிழ் சங்கம் நாசிக், தினமலர் இணைந்து கொண்டாடிய சுதந்திர தின விழா
/
தமிழ் சங்கம் நாசிக், தினமலர் இணைந்து கொண்டாடிய சுதந்திர தின விழா
தமிழ் சங்கம் நாசிக், தினமலர் இணைந்து கொண்டாடிய சுதந்திர தின விழா
தமிழ் சங்கம் நாசிக், தினமலர் இணைந்து கொண்டாடிய சுதந்திர தின விழா
ஆக 17, 2025

நாசிக்: மஹாராஷ்ட்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கங்கா முல்லுங்கி ஜில்லா பரிஷத் பள்ளியில் , நாசிக் தமிழர்கள் அனைவரும் நாசிக் தமிழ் சங்கம் மற்றும் தினமலர் தேசிய நாளிதழ் ஒன்றிணைந்து 79 ஆவது சுதந்திர தின சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்ச் சங்கம் நாசிக் தலைவர் பி. ராமமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களிடம் தேசபக்தியையும் பிறநல்ஒழுக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று மாணவர்களை பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் வால்மீகி சௌகான் மாணவர்களிடம் போதை ஒழிப்பு விழிப்புணர்வை பற்றி விரிவாக பேசினார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு தினமலர் சார்பில் புத்தகப் பைகள் மாணவர்களுக்கு நாசிக் தமிழ் சங்கம் மூலம் அளிக்கப்பட்டது.
மேலும் கல்வித்திறன் மேம்பாட்டுக்கான ஒரு ஆண்ட்ராய்டு டிவியை தினமலர் சார்பில் தமிழ்ச் சங்கம் நாசிக் மூலமாக பள்ளிக்கு வழங்கப்பட்டது.
மாணவர்கள் சுதந்திர தினத்தினை பற்றி மேடையில் வீரமுழக்கமிட்டது மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது.மாணவர்களின் உடற்பயிற்சி அணிவகுப்பு நடத்திய விதம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.பிறகு மாணவர்கள் அனைவருக்கும் தென்னிந்திய பாரம்பரிய சிற்றுண்டி வழங்கப்பட்டது .
மாணவர்கள் மிகவும் விரும்பி மகிழ்வோடு உணவு அருந்தினர்.
புத்தக பையுடன் மாணவர்களின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை காணும் பொழுது இந்த விழா ஒரு முத்தான விழாவாக அமைந்தது.
இந்த சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடுகளை தமிழ் சங்க நாசிக் செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் சிறப்பாக அமைத்திருந்தனர்.
தினமலர் செய்தியாளராகிய பள்ளி நிர்வாகத்தினரிடம் பள்ளி குழந்தைகளுக்கு இன்னமும் பல நல உதவிகளை தமிழ் சங்கம் நாசிக் உடன் இணைந்து செயல்படும் என்பதனையும் தெரிவித்தேன்.
மட்டற்ற மகிழ்ச்சியுடன் மாணவர்கள் திட்டமிட்ட சிறப்பான சீரிய பணி அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த விழா மிகப் பிரமாண்டமான நிகழ்ச்சியானது என்பதில் ஐயமில்லை.
நமது தினமலர் செய்தியாளர், பா.ஸ்ரீதர்.