/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தாராவியில் மாபெரும் ரத்த தான முகாம்.
/
தாராவியில் மாபெரும் ரத்த தான முகாம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மும்பை மாவட்ட தாராவி கிளை மற்றும் லோக்மானிய திலக் (சயான்) அரசு மருத்துவமனையுடன் இணைந்து, புதிய பாரத் ஜனதா சொசைட்டி, இந்திரா நகர், தாராவில் வைத்து 18 வது வருட ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100 க்கும் அதிகமான ரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மும்பை மண்டலத் தலைவர் அசன் காதர், மருத்துவக் குழுத் தலைவர் R. முகைதீன்,கிளை தலைவர் தாவூத், பொருளாளர் சலீம், செயலாளர் சாதிக், துணை செயலாளர்
பாஞ்ச் பீர் முகமது, ஜமாத் உறுப்பினர்கள் அப்துல், பாஷீத்,
ஷாஹுல் ஹமீது, மக்தூம், வாவா மைதீன், சித்திக்,
ஃபரீத், அக்பர், தானிஷ், காதர், அதீம், நோமான் உள்ளிட்டோர் கலந்து
கொண்டு முகாம் வெற்றிகரமாக நடந்தது.
மேலும் சிறப்பு விருந்தினராக மும்பை சாகுநகர் போலீஸ் ஆய்வாளர்கள், ஜெய்பீம் உறுப்பினர்கள், வக்கீல் சகோதிரி சந்திரலேகா, விழுதெலு
சங்க உறுப்பினர்கள், மத்தின் ஷேக் (சமூக சேவகர்), சஞ்சய் கங்கோல் (சமூக சேவகர்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தகவல்: நமது தினமலர் வாசகர்.