ADDED : ஆக 22, 2025 01:54 PM

கொழும்பு: லண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 76. அந்த நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தவர். பல்லாண்டு காலம் அந்த நாட்டு அரசியலில் இருக்கிறார். இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை எட்டியபோது, அதிபராக பொறுப்பேற்று மீண்டும் நிலைமையை சீர்படுத்தியவர்.
இவர், அதிபராக இருந்தபோது செப்டம்பர் மாதம் 2023ம் ஆண்டு லண்டன் பயணம் மேற்கொண்டார். அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலையில் பட்டம் பெற்றதை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரணில் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கென அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் என்பது புகார்.
இந்த புகார்படி விசாரணைக்கு ஆஜராகும்படி இலங்கை குற்றப்பிரிவு போலீசார், ரணிலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று காலை ஆஜரான ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.