அதிபரின் கடும் நடவடிக்கை புலம் பெயர்வோர் எண்ணிக்கை சரிவு
அதிபரின் கடும் நடவடிக்கை புலம் பெயர்வோர் எண்ணிக்கை சரிவு
ADDED : ஆக 24, 2025 12:42 AM
வாஷிங்டன்:அதிபர் டொனால்டு டிரம்பின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக, ஆறு மாதங்களில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 15 லட்சம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, 'பியூ' எனப்படும் பொது விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மையம். இந்த மையம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு கடத்தல்கள், அதிக கைதுகள் மற்றும் சட்டப்பூர்வ நுழைவு மீதான கட்டுப்பாடுகள் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றம் தொடர்பாக கடுமையான கொள்கைகளை பின்பற்றி வருகிறார்.
இதனால், 1960ம் ஆண்டுக்கு பின், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் முதல் முறையாக பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது, அமெரிக்க பொருளாதாரத்தின் முதுகெலும்பை தாக்கி உள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 5.33 கோடியாக இ ருந்த புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை, 15 லட்சம் குறைந்து ஜூனில் 5.19 கோடியாக சரிந்துள்ளது.
இது வியத்தகு மாற்றத்தை குறிக்கிறது. மேலும், இந்த சரிவின் தாக்கம், தொழிலாளர்களுக்கான சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், நிறுவனங்கள் 7.50 லட்சம் தொழிலாளர்களை இழந்துள்ளன.
புதிதாக புலம்பெய ர்ந்தோர் வந்தால் மட்டுமே பணியாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையும். மேலும் ச ரிவடைந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகம் குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.