காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் பாகிஸ்தான் அமைச்சர் குசும்பு
காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் பாகிஸ்தான் அமைச்சர் குசும்பு
ADDED : ஆக 24, 2025 12:43 AM
இஸ்லாமாபாத்:காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் நேற்று கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவது மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் குறித்து மட்டுமே எங்களுடன் பேச்சு நடத்தப்படும் என இந்தியா தெரிவித்து உள்ளது.
காஷ் மீர் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த நா ங்கள் தயாராக உள்ளோம்.
பாகிஸ்தான் எந்த மத்தியஸ்தத்தையும் கோரவில்லை. நடு நிலையான இடத்தில் சந்திப் புக்கு ஏற்பாடு செய்தால் ஒத்துழைப் போம்.
இந்தியா வுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவுடனான போரை விரும்பவில்லை என்பதை அமெரிக்காவுக்கு நாங்கள் தெளிவு படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.