அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபரீதம்: நிறுத்தப்பட்டிருந்த விமானம் மீது மோதிய விமானம்
அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபரீதம்: நிறுத்தப்பட்டிருந்த விமானம் மீது மோதிய விமானம்
ADDED : ஆக 12, 2025 11:33 AM

மோன்டானா: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, தரையிறங்கும் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் சிறிய ரக விமானம் புறப்பட்டது. மோன்டானாவின் காலிஸ்பெல் நகரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
அதே நேரத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீதும் மோதியது. விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள நிறுத்துமிடத்தில் இருந்த சில விமானங்கள் தீப்பிடித்தது.
சம்பவத்தை தொடர்ந்து, அங்கு இருந்த விமான நிலைய மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டனர்.
விபத்தின் விமான நிறுத்துமிடத்தில் இருந்த விமானங்களில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.