மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ
ADDED : ஆக 12, 2025 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் வந்தது. சென்னையில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் புகை வெளியேறியது. இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தக்க நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
விமானத்தில் இருந்து லேசான புகை வந்தது உண்மைதான் என்றும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.