மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி
மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி
UPDATED : ஆக 12, 2025 06:31 PM
ADDED : ஆக 12, 2025 10:52 AM

புதுடில்லி: ''மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை'' என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது. மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை.
அது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வராது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க விரும்பும் தொகையை தீர்மானிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சில வங்கிகள் ரூ.10 ஆயிரமாகவும், சில வங்கிகள் ரூ.2 ஆயிரமாகவும் வைத்திருக்கின்றன.
மேலும் வங்கிகள் சில வாடிக்கையாளர்களுக்கு விலக்கு அளித்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்கும் பொறுப்பு வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி ஒப்படைத்துள்ளது என தனியார் வங்கி ஒன்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.