ADDED : டிச 23, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 270 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். சக்தி மகேஸ்வரி வரவேற்றார். நூலகர் கந்தசாமி, சங்கீத வித்வான் மோகன் இறைப் பாடல்கள் பாடினர்.
கவிஞர் முராவின் நூல்களை விமர்சித்து எழுத்தாளர்கள் மணிமேகலை, மாரிமுத்து, சிவனணைந்த பெருமாள் பேசினர். பாரதி கவிதைகள் குறித்து காளியப்பன் பேசினார். கவிஞர் மூரா ஏற்புரையாற்றினார். மாரியப்பன் நன்றி கூறினார்.

