/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு, உவர்ப்பு குடிநீர்
/
தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு, உவர்ப்பு குடிநீர்
தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு, உவர்ப்பு குடிநீர்
தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு, உவர்ப்பு குடிநீர்
ADDED : டிச 23, 2025 06:06 AM
சாத்துார்: வாறுகாலின்றி தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு, உவர்ப்பு குடிநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளில் பாப்பாக்குடி ஊராட்சி மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சியில் பி. லட்சுமிபுரம், பி.ராமசாமிபுரம், பி.கண்மாய்பட்டி, கோப்ப நாயக்கன்பட்டி, பாப்பாகுடி கிராமங்கள் உள்ளன. பாப்பா குடியில் அங்கன்வாடி கட்டடம் செயல்படாமல் உள்ளது. இங்கு எம்.எல்.ஏ.,நிதியில் கட்டப்பட்ட குளியல் தொட்டி செயல்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த நிலையில் உள்ளது.
கண்மாய் பட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் ரோடுகள், தெருக்களில் காரைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இங்கு வினியோகம் ஆகும் குடிநீர் உப்பு சுவையுடன் உள்ளதால் மக்கள் வண்டிகளில் விற்கப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
செயல்படாமல் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கோப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் வாறுகால் வசதி இல்லை.இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறு கால்கள் துார்ந்து போன நிலையில் உள்ளன. காளியம்மன் கோயில் முன்பு கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களும் இப்பகுதியில் வசிக்கும் முதியவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ராமசாமிபுரத்தில் சாலை ஓரம் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் புகையால் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் ரோடு வசதி இல்லை. லட்சுமிபுரம் முறையான ரோடு வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள உலர் களம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் பயிர்களை சாலையில் கொட்டி உலர்த்தி காய்களை பிரித்து வருகின்றனர்.

