/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு .,மறியல் போராட்டம் 391 பேர் கைது
/
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு .,மறியல் போராட்டம் 391 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு .,மறியல் போராட்டம் 391 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு .,மறியல் போராட்டம் 391 பேர் கைது
ADDED : டிச 24, 2025 05:44 AM
சாத்துார், மத்திய அரசு தொழிலாளர் சட்டங்கள் 44 திருத்தி நான்கு சட்டங்களாக மாற்றியுள்ளது. இந்த நான்கு சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும்பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு.,சங்கம் சார்பில் நேற்று நடந்த மறியலில் மாவட்டத்தில் 391 பேர் கைது செய்யப்பட்டனர்.
*சாத்துார் துணை தபால் அலுவலகம் முன்பு வட்டார சாலை போக்குவரத்து தலைவர் விஜயகுமார் தலைமையில் சி. ஐ. டி .யு .சங்கத்தினர் மறியல் போராட்டம் செய்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 96 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
*சிவகாசியில் சி.ஐ.டி.யு., கன்வீனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட உதவி தலைவர் சின்னச்சாமி, பட்டாசு சங்கம் மாநகர செயலாளர் பாப்பா உமாநாத் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 54 ஆண்கள், 11 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
*அருப்புக்கோட்டையில் இ.கம்யூ.,இணைச் செயலாளர்கள் ராமர், பாலசுப்பிரமணியன், சுரேஷ்குமார் திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர். பந்தல்குடி ரோடு சந்திப்பில் மறியல் செய்தவர்கள் 37 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
*ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி, துணை செயலாளர் சந்தனம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 61 பேர் கைது செய்யப்பட்டனர்.
*ராஜபாளையம், சத்திரப்பட்டியில் 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

