/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை'
/
'கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை'
'கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை'
'கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை'
ADDED : ஆக 29, 2025 05:47 AM
திருச்சி: ''தமிழக கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 25 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:
பொறியியல், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கூடுதலாக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை, மூன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதற்கான புள்ளி விபரம் உள்ளது.
தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுகளை கூடுதலாக துவங்கியதில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலமாக கேரளா இருந்தது. தற் போது, இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.