/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளி வேன் மோதி 5 வயது சிறுமி பலி
/
பள்ளி வேன் மோதி 5 வயது சிறுமி பலி
ADDED : ஆக 30, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி; திருச்சி அருகே பள்ளி வேன் மோதி சாலையோரம் இருந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் அருகே உள்ள மாமரத்துப்பட்டியில் நேற்று கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
இதில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டம், காதம்பள்ளியை சேர்ந்த வெங்கடேசன் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். காலை, 8.30 மணியளவில், அவரது 5 வயது மகள் பைரவி, இயற்கை உபாதைக்காக களத்துார் என்ற இடத்தில் சாலையோரம் அமர்ந்திருந்தார்.
அப்போது, அவ்வழியே தொட்டியம் தனியார் பள்ளி வேன் வந்துள்ளது. சாலையோரம் இருந்த சிறுமியை கவனிக்காமல், சிறுமி மீது வேன் மோதியதில் பைரவி உயிரிழந்தார். காட்டுப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.