/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
ADDED : ஆக 28, 2025 12:33 AM

திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹிந்து முன்னணியினர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அன்னதானம், விளையாட்டு போட்டிகளை நடத்தி கோலாகலமாக கொண்டாடினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில், மாநகரில் ஆயிரத்து, 100 சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
அதிகாலை, கணபதி ஹோமத்துடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம், கோலப்போட்டி, சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு, நடனப் போட்டி பல்வேறு போட்டிகள் நடந்தது. வரும், 30ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் வரை, அன்றாடம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஹிந்து முன்னணி திருப்பூர் மாநகர், வடக்கு ஒன்றியம், புதிய பஸ் ஸ்டாண்ட் கிளை சார்பில், கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மொத்தம், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர்கள் சேவுகன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
பெருமாநல்லுார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெருமாநல்லுார் மற்றும் குன்னத்துார் பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இதில், பெருமாநல்லுார் பகுதியில் ஹிந்து முன்னணி சார்பில், 20 இடங்களிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் - 6, ஹிந்து சமத்துவ கட்சி - 1, பாரத் சேனா - 1, பொதுமக்கள் - 5 இடங்கள் என மொத்தம், 33 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
குன்னத்துார் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 11 இடங்களிலும், ஹிந்து மக்கள் கட்சி - 5, பொதுமக்கள் - 28 இடங்கள் என மொத்தம், 44 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில், ஹிந்து முன்னணி சார்பில், இன்று (28ம் தேதி) மாலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.
குன்னத்துார் பஸ் ஸ்டாப் அருகில் இருந்து, சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோபி அருகே பாசன வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.