/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு இடையூறு எதிர்த்து ஹிந்து முன்னணி போராட்டம்
/
விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு இடையூறு எதிர்த்து ஹிந்து முன்னணி போராட்டம்
விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு இடையூறு எதிர்த்து ஹிந்து முன்னணி போராட்டம்
விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு இடையூறு எதிர்த்து ஹிந்து முன்னணி போராட்டம்
ADDED : ஆக 28, 2025 02:05 AM

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 5,000 சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டன.
தமிழகம் முழுதும் பல இடங்களில், சிலை பிரதிஷ்டை செய்ய விடாமல் இடையூறு, சிலையை சேதப்படுத்துதல் போன்றவை நடந்ததாக குற்றஞ்சாட்டி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கொங்கு நகர் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியா முழுதும் மிக சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் மட்டும், சில உயரதிகாரிகள், போலீசார் வாயிலாக இடையூறு ஏற்படுத்துகின்றனர். சென்னை, பாரீஸ் கார்னரில் சிலை உடைக்கப்பட்டது.
பிரதிஷ்டை செய்த நபரை கைது செய்தனர். வேலுாரில் சிலையை சேதப்படுத்தினர்.
பட்டுக்கோட்டையில், விநாயகர் பந்தலுக்கு செல்ல கூடிய மின் ஒயரை துண்டித்தனர். இதனால், மனமுடைந்து தீக்குளித்த தொண்டர், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
ஊர்வலத்தை சீர்குலைக்க செய்கின்றனர். அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றாவிடில், அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு கூறினார்.