/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : ஆக 28, 2025 12:32 AM

அவிநாசி:
அவிநாசி ஒன்றியம், சாமந்தங்கோட்டையில் ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் உள்ளது. திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோவில் அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், நான்கு கால யாக பூஜை, கும்பாபிேஷக பூஜைகள், விமரிசையாக நடந்தது.
நேற்று காலை நாடி சந்தானம், திருக்குடங்கள் உலா வருதல் ஆகியவற்றுடன் கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ தொந்தி விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் காலை 9:00 முதல், 9:30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.
அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சிதாச சுவாமி, ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவான நந்தா சரஸ்வதி ஸ்வாமி ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தொந்தி விநாயக பெருமானை வழிபட்டனர். விழாவையொட்டி, திருப்பணி குழுவினர், ஸ்ரீ அங்காளம்மன் வஞ்சியம்மன் திருக்கோவில் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது.