/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலவன் மெட்ரிக் பள்ளி தடகளத்தில் முத்திரை
/
வேலவன் மெட்ரிக் பள்ளி தடகளத்தில் முத்திரை
ADDED : ஆக 24, 2025 07:08 AM

திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வேலவன் ெமட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் 14 வயது பிரிவு, 600 மீ., ஓட்டத்தில் 7 ம் வகுப்பு மாணவர் பிரத்யூன் முதலிடம் பெற்றார். மேலும், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றார். ஆண்கள் 19 வயது பிரிவில், 400 மீ., ஓட்டத்தில், 9 ம் வகுப்பு மாணவர் ஹரீஸ் முதலிடம் பெற்றார்.
பெண்கள் பிரிவில், 9ம் வகுப்பு மாணவி சுருதிகா, 3 ஆயிரம் மீட்டர், ஓட்டத்தில், முதலிடம் பெற்றார். பெண்கள் 14 வயது பிரிவில் பூர்விகா கிருஷ்ணன், 7ம் வகுப்பு மாணவி, 100 மீ., ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார்.
ஆண்கள் 19 வயது பிரிவில் சிலம்பத்தில், 12ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் முதலிடம் பெற்றுள்ளார். இவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது தவிர, 13 வயது பிரிவில், பிரத்யூன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
தடகளப் போட்டிகளில் இப்பள்ளி அணி மொத்தமாக ஆறு தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளனர். மாணவர்கள், பயிற்சிஅளித்த ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.