/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.3.19 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
/
ரூ.3.19 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
ADDED : ஆக 24, 2025 07:08 AM
திருப்பூர் : வெள்ளகோவில், வீரசோழபுரம் ஊராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், 79 பேருக்கு நத்தம் நிலத்தில் வீட்டு மனைப்பட்டா; 29 பேருக்கு இலவச மனைப்பட்டா, 153 பேருக்கு இ.பட்டா; 66 பேருக்கு, நத்தம் துாய சிட்டா ஆகியன வழங்கப்பட்டது. மேலும், 16 பேருக்கு ரேசன் அட்டை; 65 பேருக்கு இலவச வீடு திட்டத்துக்கு தலா 3.5 லட்சம் மதிப்பிலான உத்தரவு; ஐந்து மகளிர் குழுக்களுக்கு 30 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 425 பேருக்கு 3.19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைஅமைச்சர் சாமிநாதன் வழங்கி பேசினார்.
தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் மோகனன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.