ADDED : ஆக 24, 2025 07:06 AM

த ங்கம் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆஷா கூறியதாவது:
வீதியில் அடிபட்டு கிடக்கும் நாய்கள், மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்களை பிடித்து வந்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். கடந்த, 12 ஆண்டு பணியில், 22 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம்.
திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள எங்கள் காப்பகத்தில், 600 நாய்களை வைத்து பராமரித்து வருகிறோம். குறிப்பாக ஆடி, புரட்டாசி மாதம், நாய்களின் இனப்பெருக்க காலம் என்பதால், ரோடுகளில் நாய்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.நாய்களால் மனிதர்கள், ஆடு உள்ளிட்ட கால்நடைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அதே நேரம் நாய்கள் கொல்லப்படக் கூடாது.
எனவே, நாய்கள் தொல்லை குறித்த தகவலை எங்களுக்கு தெரிவித்தால், எங்களிடம் உள்ள பயிற்சி பெற்ற இளைஞர்கள் வாயிலாக, நாய்களை பிடித்து வந்து, கருத்தடை செய்து விடுவோம். நாய்களை பிடித்து வர, பயிற்சி பெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் எங்களிடம் பணியாற்றுகின்றனர்.