/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
/
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
ADDED : செப் 07, 2025 06:35 AM

பெருமாநல்லுார் : காவலர் தினத்தை முன்னிட்டு, போலீஸ் - பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பெருமாநல்லுார் போலீசார் சார்பில், விளையாட்டு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், மியூசிக் சேர், கயிறு இழுத்தல், கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் பரிசுகள் வழங்கி பாராட்டினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமையில் போலீசார் கணக்கம்பாளையம், பெருமாநல்லுார், நியூ திருப்பூர், தொரவலுார் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களிடம் போக்சோ வழக்கு, அவசர அழைப்பு எண், சைபர் குற்றங்கள் தடுப்பு, உள்பட பல்வேறு குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.