/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
13ம் தேதி பழனிசாமி வருகை அ.தி.மு.க.,வினர் ஆலோசனை
/
13ம் தேதி பழனிசாமி வருகை அ.தி.மு.க.,வினர் ஆலோசனை
ADDED : செப் 07, 2025 07:24 AM
அவிநாசி : தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, வரும், 13ம் தேதி அவிநாசியில் பிரசாரம் செய்கிறார்.
இதனையொட்டி, அவிநாசி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில், பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். அவிநாசி நகர செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் (மேற்கு), தனபால் (தெற்கு), நகர துணை செயலாளர் மூர்த்தி உட்பட பல நிர்வாகிகள், நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் அழைப்பிதழ் வழங்கி, கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.