/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வரும் 12ம் தேதி பழனிசாமி பிரசார பயணம்
/
திருப்பூரில் வரும் 12ம் தேதி பழனிசாமி பிரசார பயணம்
திருப்பூரில் வரும் 12ம் தேதி பழனிசாமி பிரசார பயணம்
திருப்பூரில் வரும் 12ம் தேதி பழனிசாமி பிரசார பயணம்
ADDED : செப் 07, 2025 07:39 AM
திருப்பூர், : 'மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி, மாவட்டம் வாரியாக, பிரசாரத்தை துவக்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் துவக்கிய பிரசார பயணம், மாநிலம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 11ம் தேதி, மாநகர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் தொகுதி, புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், வரும் 12ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
வரும், 12ம் தேதி திருப்பூர் வடக்கு தொகுதியில், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியிலும், திருப்பூர் தெற்கு தொகுதியில், 'சென்டிமென்ட்' ஆன, கோட்டை மாரியம்மன் கோவில் அருகே பேசுகிறார். பிரசாரம் மேற்கொள்ளும் பொதுசெயலாளர் பழனிசாமி, பனியன் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'பொதுசெயலாளரின் தேர்தல் பிரசார பயணம், திருப்பூரில் நடக்கும் போது, இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது எங்களது திட்டம். அதற்காக, வார்டுக்கு, 1,500 பேர் என்ற வகையில், கட்சியினரை அழைத்துவர திட்டமிட்டுள்ளோம்.
தொழில்துறையினர், விவசாயிகளை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் தொழில்துறைக்கான, முக்கிய தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை வெளியிட்டு, திருப்பூரை திருப்புமுனையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.