/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாடு முழுவதும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்; சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
/
நாடு முழுவதும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்; சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்; சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்; சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
ADDED : செப் 07, 2025 07:39 AM

திருப்பூர் : 'நாடு முழுவதும், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்,' என்று, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின், 34 வது பொதுக்குழு கூட்டம், தெற்கு ரோட்டரி மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் காந்திராஜன் தலைமை வகித்தார். உப தலைவர் ஈஸ்வரன், தனியார் சுத்திகரிப்பு நிலைய கூட்டமைப்பு தலைவர் மகாலிங்கம், செயலாளர் ஆல்வின் கிரி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பக்தவத்சலம் வரவேற்றார். பொதுசெயலாளர் முருகசாமி, ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் மாதேஸ்வரன், வரவு -செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
உறுப்பினர்கள் கலந்தாய்வை தொடர்ந்து, சங்க தலைவர் காந்திராஜன் சிறப்புரையாற்றினார். தீர்மானங்களை, பொதுச்செயலாளர் முருகசாமி வாசித்தார். இணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் l தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்ற மத்திய, மாநில அரசு களுக்கு நன்றி தெரிவிப்பது.
l நாடு முழுவதும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.
l வெளி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், தற்போதுள்ள வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்க வேண்டும்.
l பொது சுத்திகரிப்பு நிலையங்களில், காற்றாலை அல்லது சோலார் மின் உற்பத்தி செயல் படுத்த மானியம் வழங்க வேண்டும்.
l பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கிய வட்டியில்லா கடனை, மானியமாக மாற்றித்தர வேண்டும்.
l பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், பனியன் தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.
l பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட, 12 சதவீத ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைத்த மத்திய அரசுக்கு நன்றி.
l தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, மாநில அரசு குறைக்க வேண்டு கிறோம்.
l தொழில் கூடங்களுக்கான சொத்துவரியை ஓராண்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
l சாய ஆலைகளின் முதலீட்டுக்கு, 25 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.
l 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப செயல்பாட்டை பாராட்டி, மத்திய அரசு பசுமை சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்க வேண்டும்.
l அதிக முதலீட்டில் இயங்கும் சாய ஆலைகளுக்கு, திருப்பூர் தொழில்துறையினர் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.