/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
/
அ.தி.மு.க., பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
அ.தி.மு.க., பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
அ.தி.மு.க., பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
ADDED : செப் 07, 2025 07:38 AM

பல்லடம் : முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் செப்., 12ம் தேதி, பல்லடத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளார். பல்லடம் நகர ஒன்றிய அ.தி.மு.க.,வினர், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழ்ச்சி நடக்கவுள்ள என்.ஜி.ஆர்., ரோட்டில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, சித்துராஜ் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.