/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டை கோலாகலம்
/
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டை கோலாகலம்
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டை கோலாகலம்
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டை கோலாகலம்
ADDED : செப் 07, 2025 07:37 AM

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி அருகே ராக்கியபாளையம், ஐஸ்வர்யா கார்டனிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில், தாடங்க பிரதிஷ்டை விழா விமரிசையாக நடந்தது.
அதில், ஸ்ரீசக்கர சிவசக்கர தாடங்க பிரதிஷ்டை விழா, 4 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், உபச்சார பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை, மங்கல இசையுடன் கோபூஜை நடந்தது; நான்காம் கால பூஜைகள், மூலமந்திர ேஹாமம் நடந்தது. மூலதஸ்தான அபிேஷகத்தை தொடர்ந்து, காலை, 7:45 மணி முதல் 8:30 வரை, தாடங்கம் சாற்றும் நிகழ்ச்சியும் ஆச்சார்ய உற்சவமும் நடைபெற்றது. முன்னதாக, பெங்களூரு கைலாச ஆசிரம மஹா சமஸ்தான பீடாதிபதி ஐகத்குரு ஸ்ரீஜெயேந்திரபுரி மஹா சுவாமிகள் விஜயம் செய்து, தேவிக்கு சாற்றிய ஸ்ரீசக்ர ,சிவசக்ர தாடங்கத்தை வணங்கி, ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்தும், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.