/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியவர் கண்கள் தானம்; குடும்பத்தினர் நெகிழ்ச்சி
/
முதியவர் கண்கள் தானம்; குடும்பத்தினர் நெகிழ்ச்சி
முதியவர் கண்கள் தானம்; குடும்பத்தினர் நெகிழ்ச்சி
முதியவர் கண்கள் தானம்; குடும்பத்தினர் நெகிழ்ச்சி
ADDED : டிச 24, 2025 06:59 AM

அவிநாசி: அவிநாசி, தேவம்பாளையத்தை சேர்ந்த முதியவரின் கண்கள் தானம் வழங்கப்பட்டது.
அவிநாசி, தேவம்பாளையத்தில் வசித்தவர் பழனிசாமி கவுண்டர், 77. வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்தார். அவரது கண்களை தானம் வழங்க, அவரது குடும்பத்தினர் முன்வந்ததன் அடிப்படையில், அவிநாசி களம் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். அவர்களது வழிகாட்டுதல் அடிப்படையில், அகர்வால் கண் மருத்துவமனை வாயிலாக அவரது கண்கள் தானம் வழங்கப்பட்டது.
களம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில், ''மரக்கன்று நடவு செய்யும் பணியுடன், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி வருகிறோம். அவ்வகையில், பழனிசாமியின் உறவினர்கள், அவரது கண்களை தானம் செய்தனர்,'' என்றார்.