/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்
/
ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்
ADDED : டிச 24, 2025 07:00 AM

பல்லடம்: அரசு விதிமுறைகளின்படி, பழைய ரோட்டை அகற்றிய பின்னரே, புதிய ரோடு அமைக்க வேண்டும். பழைய ரோட்டின் மேல் அமைப்பதால், அதன் மட்டம் உயர்ந்து, வீடுகள், கடைகள் பள்ளமாகின்றன.
மேலும் புதிதாக அமைக்கப்படும் ரோட்டின் தடிமன் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், அவற்றின் தரம் குறைந்து, விரைவில் சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், பழைய ரோட்டை அகற்றிவிட்டு, புதிய ரோட்டை அமைக்க வேண்டும் என, அரசு விதிமுறை வகுத்துள்ளது.
ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் பல்லடம் அருகே, சின்னக்கரை -- ஆறுமுத்தாம்பாளையம் பிரிவு வரை, 3.6 கி.மீ., துாரமுள்ள ரோடு, 2.71 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. முன்னதாக பழைய ரோடு அகற்றப்படாமல், ரோடு மேல் ரோடு போடப்பட்டு வருகிறது. பழைய ரோட்டை அகற்றாமல், ரோடு மேல் ரோடு போடப்படுவதால், மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், ரோட்டின் தரமும் குறைய வாய்ப்பு உள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.

