/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
அ.தி.மு.க., அரசில் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை திருப்பத்துாரில் இ.பி.எஸ்., உறுதி
/
அ.தி.மு.க., அரசில் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை திருப்பத்துாரில் இ.பி.எஸ்., உறுதி
அ.தி.மு.க., அரசில் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை திருப்பத்துாரில் இ.பி.எஸ்., உறுதி
அ.தி.மு.க., அரசில் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை திருப்பத்துாரில் இ.பி.எஸ்., உறுதி
ADDED : ஆக 14, 2025 01:57 AM
திருப்பத்துார், ''அ.தி.மு.க., அரசு மீண்டும் அமைந்தவுடன் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
திருப்பத்துாரில் நேற்று, அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழில் முனைவோருடன், அவர் கலந்துரையாடி பேசியதாவது: திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள, 32 அமைப்புகளை சேர்ந்தவர்கள், பல்வேறு பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் அதற்கு தீர்வு காணப்படும். தென்பெண்ணையாறு - பாலாற்றை இணைக்க, அ.தி.மு.க., ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால், நிறைவேற்ற முடியவில்லை. இந்த அரசு தடுப்பணை கட்ட, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 200 தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தது, ஆனால், அறிவிப்போது நின்று விட்டது. கடலில் கலக்கும் உபரி மழை நீரை சேமிக்க, நீர் மேலாண்மை திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்ததை, தற்போது ரத்து செய்து விட்டார்கள். மீண்டும், அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.காவிரி நதி, 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நிலையில், காவிரி நதி கரையோர நகரங்களில் வெளியேறும் அசுத்த நீர், அதில் கலந்து மாசு ஏற்பட்டதை சீரமைக்க, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தால் நின்றது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராது என, சட்டசபையில், தி.மு.க., கேலி செய்தது. தற்போது மத்திய அரசு, இந்த திட்டத்திற்கு, 11,500 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி வழங்கி, 950 கோடி ரூபாய் நிதியை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு, 60 சதவீதம், மாநில அரசின் பங்கு, 40 சதவீதம்.
பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் முகத்தில் ஆசிட் வீசி கொள்ளை சம்பவம் நடப்பதற்கு காரணம், காவல்துறையை முழுமையாக செயல்பட, இந்த அரசு அனுமதிக்காதுதான். காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் காவல்துறையில் யாருடைய தலையீடும் கிடையாது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில், குடும்ப தகராறை தடுக்க சென்ற போலீஸ் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்ய அவர்களுக்கு பயமில்லை. காவல்துறை இன்றைக்கு செயலிழந்து காட்சியளிக்கிறது.
மத்திய, மாநில அரசுக்கு இடையே இருக்கின்ற பிரச்னையால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி, தள்ளி போய் கொண்டே இருக்கிறது. அதை முறையாக அணுகி முறையாக பெற வேண்டும் என்பது தான், என்னுடைய கருத்து.
இவ்வாறு, அவர் பேசினார்.