/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
'கம்பி நீட்டிய' கைதியால் இரு போலீசார் இடமாற்றம்
/
'கம்பி நீட்டிய' கைதியால் இரு போலீசார் இடமாற்றம்
ADDED : ஆக 20, 2025 03:07 AM
நாட்றம்பள்ளி:கைதி தப்பியதால், பணியில் மெத்தனமாக இருந்ததாக எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலரை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நாட்றம்பள்ளியை சேர்ந்த கங்காதரன், 45, பழனி, 48, முருகேசன், 62, மற்றும் பச்சூரை சேர்ந்த ரமேஷ், 58, ஆகியோரை கைது செய்தனர்.
அப்போது, எஸ்.ஐ., மஞ்சுநாதன், தலைமை காவலர் சீனிவாசன் ஆகியோர் கங்காதரன் உள்ளிட்ட நான்கு பேரையும், மருத்துவ பரிசோதனைக்கு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கங்காதரன் போலீசாரிடமிருந்து தப்பினார். பணியில் மெத்தனமாக செயல்பட்டு கைதியை தப்பவிட்ட, மஞ்சுநாதன், சீனிவாசன் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., சியாமளாதேவி உத்தரவிட்டார்.