/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'
/
சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'
ADDED : ஆக 20, 2025 11:30 PM
திருப்பத்துார்:ஆம்பூர் அருகே, சிறுமியரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனியார் நிறுவன காவலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுபாதம், 55. தனியார் நிறுவன காவலாளி. இவர் கடந்த, 2021 டிச., 13ல், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, அங்கு தனியாக இருந்த, 9 வயது சிறுமி, அவரது தங்கை, 6 வயது சிறுமி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
சிறுமியர் அலறி கூச்சலிடவே, அங்கிருந்து ஏசுபாதம் தப்பினார். ஆம்பூர் மகளிர் போலீசார், ஏசுபாதத்தை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம், ஏசுபாதத்திற்கு, 10 ஆண்டு சிறை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.