/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காதலனுடன் வாக்குவாதம் கல்லுாரி மாணவி தற்கொலை
/
காதலனுடன் வாக்குவாதம் கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : ஆக 14, 2025 02:59 AM

திருவாரூர்:காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலுார் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சுமத்ரா, 19. இவர், திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்.சி., ரேடியோகிராபி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி அருகில் வீடு பிடித்து, 10 மாணவியருடன் தங்கி இருந்தார்.
சொந்த ஊரில், பள்ளியில் படித்த போது, அதே பகுதி யுவராஜ், 21, என்பவரை சுமத்ரா காதலித்தார். நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், காதலனுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.பின், மாணவி துாங்க சென்றார். சக மாணவியர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, சுமத்ராவை தேடியுள்ளனர். வீட்டு கதவை திறந்து பார்த்தபோது, வாசலில் உள்ள கொட்டகையில், சுமத்ரா துாக்கில் தொங்கியுள்ளார்.
திருவாரூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். சுமத்ரா இறந்த தகவலறிந்து, யுவராஜும் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.