/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
புத்தாற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
/
புத்தாற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
புத்தாற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
புத்தாற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
ADDED : ஆக 12, 2025 03:51 AM
நன்னிலம்: நன்னிலம் அருகே புத்தாற்றில் குளித்த நான்கு வா லிபர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, வில்லியநல்லுாரை சேர்ந்தவர்கள் ஜெயகுமார், 30, ஹரிஹரன், 30, மணிகண்டன், 30. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே முதல்கட்டளையை சேர்ந்தவர் மணிவேல்.
நான்கு பேரும் உறவினர்கள். நேற்று மாலை, வில்லியநல்லுாரில் இருந்து காரில், நன்னிலம் வந்தனர். கீழ்குடி கிராமத்தில் உள்ள புத்தாறு தடுப்பணையில் குளித்தனர். நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள், நன்னிலம் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நான்கு பேர் உடல்களையும் மீட்டு, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நன்னிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மணிகண்டன் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது.