/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காலை உணவு 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
/
காலை உணவு 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ADDED : ஆக 14, 2025 10:11 AM

வலங்கைமான்: பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ - மாணவியர் 8 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, பூனாயிருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 14 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று காலை, மாணவ - மாணவியர் 8 பேர் காலை உணவாக ரவா கிச்சடி, சாம்பார் சாப்பிட்டனர்.
இதை சாப்பிட்ட இரண்டு பேர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. ஊழியர்கள், உணவை சோதித்து பார்த்ததில், சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது.
ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை, அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.