/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத மின் நிலையம் மின் சாதன பொருள்கள் திருட்டு
/
சுற்றுச்சுவர் இல்லாத மின் நிலையம் மின் சாதன பொருள்கள் திருட்டு
சுற்றுச்சுவர் இல்லாத மின் நிலையம் மின் சாதன பொருள்கள் திருட்டு
சுற்றுச்சுவர் இல்லாத மின் நிலையம் மின் சாதன பொருள்கள் திருட்டு
ADDED : டிச 24, 2025 05:40 AM

திருத்தணி: திருத்தணி துணை மின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாடுகள் சுற்றித் திரிவதுடன், மின் சாதன பொருட்கள் திருடு போகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
திருத்தணி பழைய சென்னை சாலையில், 110 கி.வோ., கொண்ட துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.
இந்த மின்நிலையம், 5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருந்து, திருத்தணி, அகூர், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், பொன்பாடி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது-.
இந்நிலையில், துணை மின் நிலையத்திற்கு இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கம்பி வலையால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பி வலைகள் சேதமடைந்துள்ளதால், பகல் நேரத்திலேயே, 10க்கும் மேற்பட்ட மாடுகள், துணை மின் நிலையத்திற்குள் மேய்ந்து வருகின்றன.
மேலும், துணை மின்நிலைய வளாகத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது அதிகளவில் செடி, கொடிகள் மற்றும் கோரை புற்கள் வளர்ந்துள்ளன.
இதனால், விஷ ஜந்துக்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
மேலும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர், துணை மின்நிலையத்திற்குள் புகுந்து மின் சாதன பொருள்களை அடிக்கடி திருடிச் செல்கின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, திருத்தணி துணை மின்நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

