/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அண்ணியை கொலை செய்த 'பாசக்கார' கொழுந்தன் கைது
/
அண்ணியை கொலை செய்த 'பாசக்கார' கொழுந்தன் கைது
ADDED : டிச 23, 2025 06:00 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே, அண்ணன் மனைவியை கொலை செய்த கொழுந்தனை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மா வட்டம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளைய ராஜா, 30. தனியார் கம்பெனி ஓட்டுநர். இவருக்கு சாந்தி, 26, என்ற மனைவியும், 3 மற்றும் ஒன்ற ரை வயதில் இரு பெண் குழந்தைகளும் உள்ளன.
இளையராஜாவின் சகோதரர் இசைமேகம், 28. இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன் லாவண்யா, 26, என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் அண்ணி சாந்தி, இசைமேகத்தின் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று இரவு 9:00 மணிக்கு, சாந்திக்கும் இசைமேகத்திற்கும் வாக் குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திர மடைந்த இசைமேகம், அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், இசைமேகத்தை கைது செய்து வி சாரித்து வருகின்றனர்.

