sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 அரசு பள்ளிகளை சீரமைக்காமல் இரு துறைகள்... போட்டா போட்டி: மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி

/

 அரசு பள்ளிகளை சீரமைக்காமல் இரு துறைகள்... போட்டா போட்டி: மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி

 அரசு பள்ளிகளை சீரமைக்காமல் இரு துறைகள்... போட்டா போட்டி: மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி

 அரசு பள்ளிகளை சீரமைக்காமல் இரு துறைகள்... போட்டா போட்டி: மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி


UPDATED : டிச 23, 2025 05:59 AM

ADDED : டிச 23, 2025 05:56 AM

Google News

UPDATED : டிச 23, 2025 05:59 AM ADDED : டிச 23, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் உள்ள அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆவணங்கள், வகுப்பறைகள் மற்றும் தளவாட பொருட்கள் குறித்து கணக்கு ஒப்படைப்பதில் ஒன்றிய நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே போட்டி நிலவி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக, பெற்றோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில், 15 தொடக்கப் பள்ளி மற்றும் ஐந்து நடுநிலைப் பள்ளி என, மொத்தம் 20 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.கடந்த 2023 வரை, நகராட்சியில் இருக்கும் பள்ளிகள் பராமரிப்பு, வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, திருத்தணி ஒன்றிய நிர்வாகம் செய்து கொடுத்தது.

கடந்த 2023 டிச., 29ம் தேதி ஒன்றிய நிர்வாகம், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகல் மற்றும் கலெக்டரின் உத்தரவு நகலையும், நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கியது.

மேலும், 2024 ஜனவரி முதல் திருத்தணி நகராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளுக்கு ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மோற்கொள்ளவதில்லை. இதனால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் யார் செய்வது என, போட்டி நிலவி வருகிறது.

எனவே, கலெக்டர் பிரதாப் துரித நடவடிக்கை எடுத்து, அரசு பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை உறுதி செய்ய வேண்டும் என, திருத்தணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரஸ்பர குற்றச்சாட்டு இதுகுறித்து திருத்தணி ஆணையர் சந்தானம் கூறியதாவது:

திருத்தணி நகராட்சியில் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்த, 20 அரசு பள்ளிகளை, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டோம். எனவே, நகராட்சி நிர்வாகம் தான் பள்ளிகளை பராமரித்து, அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி அமைந்துள்ள இருப்பிடம், வகுப்பறை கட்டடம், ஆய்வகம், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்றவை குறித்து கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளோம்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என, அறிவுறுத்தியுள்ளோம். இந்த பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தை, நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால், நகராட்சி நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆவணங்கள் ஒப்படைக்கவில்லை இதுகுறித்து, திருத்தணி நகராட்சி பொறுப்பு அதிகாரி தயாநிதி கூறியதாவது:

ஒன்றிய நிர்வாகம், நகராட்சியில் உள்ள 20 பள்ளிகளை எங்களிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி, கடிதம் மட்டுமே வழங்கியுள்ளனர். ஆனால், பள்ளிகளின் நில ஆவணங்கள், பள்ளி கட்டடங்கள் எண்ணிக்கை, வகுப்பறைகள், இருக்கைகள் மின்விசிறிகள் மற்றும் தளவாட பொருட்கள் குறித்து எவ்வித பட்டியலும் இதுவரை ஒப்படைக்கவில்லை.

இந்த பட்டியலை தருமாறு, நான்கு முறை ஒன்றிய நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. நாங்களே எப்படி, 20 பள்ளிகளுக்கு சென்று, தலைமை ஆசிரியர்களிடம் தகவலை பெற முடியும்.

ஆரம்பத்தில் இருந்து, 2023 வரை ஒன்றிய நிர்வாகம் அரசு பள்ளிகளை பராமரித்து, வளர்ச்சி பணிகளை செய்து வந்ததால், அவர்களிடம் ஆவணம் இல்லை என, எப்படி கூற முடியும்.

மேற்கண்ட தகவல்களை வழங்கினால் தான், அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், நகராட்சி பள்ளிகள் என, பெயர் மாற்றுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் பழுதடைந்த கட்டடங்களை அகற்ற, ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தால், நகராட்சி நிர்வாகத்திடம் பள்ளிகளை ஒப்படைத்துவிட்டோம் எனக் கூறி, நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். நகராட்சி அதிகாரிகள் எங்களிடம் முறையான ஆவணங்களுடன் பள்ளிகளை ஒப்படைக்காததால், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க இயலாது. தற்போதும், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என்ற பெயரில் இயங்கி வருவதால், எங்களால், எதுவும் செய்ய முடியாது என இரண்டு துறைகளும் மாறி, மாறி கூறுவதால், யாரிடம் மனுக்கள் கொடுப்பது என பல தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. - தலைமை ஆசிரியர்கள், திருத்தணி.








      Dinamalar
      Follow us