/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாலிழையில் உயிர்தப்பிய லாரி ஓட்டுநர்
/
நுாலிழையில் உயிர்தப்பிய லாரி ஓட்டுநர்
ADDED : டிச 23, 2025 06:01 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தப்பாளையம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.
தொழிற்சாலைகளில் கழிவாக வெளியேற்றப்படும் கருப்பு நிற மண்ணை ஏற்றிக்கொண்டு, டிப்பர் லாரி நேற்று வந்தது. தனஞ்செய், 46, என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
லாரியின் பின்புற கதவை திறக்காமல், ஹய்டிராலிக் முறையில், லாரியின் பின்பகுதியை துாக்கினார். மண் வெளியேற வழியின்றி, பின்புறம் பாரம் அதிகரித்ததால், லாரியின் முன்பக்க கேபின் மேலே துாக்கியபடி அந்திரத்தில் நின்றது.
அந்திரத்தில் நின்ற லாரியை ஒட்டியபடி உயரழுத்த மின்கம்பிகள் இருந்தது. இதனால், நுாலிழையில் லாரி ஓட்டுநர் உயிர்தப்பினார். அதன்பின், லாரி பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால், பாத்தப்பாளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

