/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி உள்ளது ரயில்வே அதிகாரி விளக்கம்

ADDED : டிச 24, 2025 05:36 AM
திருவாலங்காடு: மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி உள்ளதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே மணவூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, நான்கு நடைமேடைகள் உள்ள நிலையில், ஒன்றில்கூட கழிப்பறை வசதிகள் சரியாக இல்லாதது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட ரயில்வே அதிகாரிகள் அனுப்பிய விளக்க அறிக்கை:
மணவூர் ரயில் நிலையத்தில், பயணியருக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளன.
மணவூர் ரயில் நிலையத்திற்கு தினமும் 73 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன; 3,700 பயணியர் மட்டுமே வந்து செல்கின்றனர்.
பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்கவும், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.