/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்
/
புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்
ADDED : டிச 24, 2025 05:36 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில், 11,882 மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூவலுார் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 - பிளஸ் 2 வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமைப் பெண்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மேல்நிலை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இத்திட்டத்தின்படி, 2022 செப்., முதல் இதுவரை, 11,882 கல்லுாரி மாணவியர் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து, அரசு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

