/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : டிச 23, 2025 01:26 AM
திருவள்ளூர்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தில், ம கள் பிறப்பு விழா நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பான, ஏ.ஐ., விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார்.
மேலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவியர் மற்றும் பெற்றோரிடம், பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கடிதத்தை கையெழுத்திட்டு வழங்கினார்.

