/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாலிபர் கொலையில் 5 பேருக்கு ஆயுள்
/
வாலிபர் கொலையில் 5 பேருக்கு ஆயுள்
ADDED : செப் 02, 2025 05:29 AM

திருநெல்வேலி: கூடங்குளம் அருகே கோயில் திருவிழாவில் டூ வீலர் ஓட்டிய தகராறில் வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ளது கூத்தங்குழி கடற்கரை கிராமம். 2021 ல் அங்கு நடந்த கோயில் திருவிழாவில் சிலுவை ஆன்ட்ரோ அபினஸ் 22, டூவீலரில் சென்றாராம். இது தொடர்பாக இன்னொரு தரப்பினருடன் மோதல் ஏற்பட்டது. 2021ஆக. 28 இரவில் ஒரு கும்பல், அபினசை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இந்த வழக்கு திருநெல்வேலி நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கொலையாளிகளான சந்துரு 23, ரேவந்த் 27, சஞ்சய் பிரதீஷ் 23, நிக்கோலஸ் ராபின்சன் 23, டென்னிஸ் 24 , ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கதிரவன் தீர்ப்பளித்தார்.வினிஸ்டர், இருதயம் விடுவிக்கப்பட்டனர்.