/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரயிலில் 34 பவுன் திருடியவர் கைது
/
ரயிலில் 34 பவுன் திருடியவர் கைது
ADDED : செப் 02, 2025 10:05 PM

திருநெல்வேலி:பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆக., 14 சென்ற ரயிலில் திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணித்தார்.
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் அவரது கைப்பையில் இருந்த 34 பவுன் நகைகள் மற்றும் அலைபேசி திருடு போயிருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அவர் புகார் செய்தார். எஸ்.ஐ.,ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஸ்வின் 23, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கேரளா சென்று கைது செய்தனர். அவரிடம் இருந்து அலைபேசி, நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ரயிலில் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.