/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
/
அரசு பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
ADDED : செப் 02, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: மானுார் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து மானுார் வழியாக வடக்கு செழியநல்லுாருக்கு சென்ற அரசு டவுன் பஸ் நேற்று காலை 11:00 மணிக்கு பள்ளமடை அருகே சென்ற போது ரோட்டின் குறுக்கே திடீரென மாடு வந்தது.
இதனால் டிரைவர் ராஜா பஸ்சை திருப்ப முயற்சித்தபோது நிலைதடுமாறி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட பயணிகள் 17 பேர் காயமடைந்தனர் .போலீசார் விசாரித்தனர்.