/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் ‛'டைப் 1' சர்க்கரை சிகிச்சை மையம் துவக்கம்

ADDED : டிச 24, 2025 05:55 AM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டைப் 1 வகை சர்க்கரை பாதிப்பிற்கான சிகிச்சை மையம் துவக்கப்பட்டது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் இன்சுலின் சுரப்பது முற்றிலும் இல்லாமல் இருப்பது டைப் 1 சர்க்கரை பாதிப்பாகும்.
தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், கோவை இதயங்கள் அறக்கட்டளை சார்பில் டைப் 1 வகை சர்க்கரை சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா மையத்தை திறந்து வைத்தார்.
பொது மருத்துவத்துறைத் தலைவர் திருநாவுக்கரசு, உதவி பேராசிரியை சொப்னஜோதி, கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், கோவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பங்கேற்றனர்.
பொது மருத்துவத்துறை தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: டைப் 1 சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டவர்களை பரிசோதனை செய்யவும், குளுக்கோ மீட்டர் கருவி, அதற்கான குளுக்கோஸ் மரிப்ஸ், நீடில்ஸ் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. உரிய இடைவெளிகளில் கண்காணித்து சிகிச்சை வழங்குகிறோம். சிகிச்சை மையத்தில் ஒரு துளி ரத்தத்தில் ஹீமோகுளோபின், யூரியா, கிரியாட்டின், யூரிக் ஆசிட், HbA1c பரிசோதிக்கப்படும் வசதிகளும் உள்ளன என்றார்.