ADDED : டிச 24, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணி, தேனி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.18 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டடம் பணி, தெப்பம்பட்டியில் ரூ.17 கோடியில் குடிநீர் வடிகால் வாரிய பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலவலர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
அனைத்துப் பணிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், குடிநீர் வாரியம் செயற்பொறியாளர் பார்த்திபன், அனைத்துத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

