/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மடிநோய்க்கு மருத்துவ தீர்வு குறுந்தகடு வெளியீடு
/
மடிநோய்க்கு மருத்துவ தீர்வு குறுந்தகடு வெளியீடு
ADDED : டிச 24, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய விரிவாக்க கல்வித்துறை சார்பில் கறவை மாடுகளில் அறிகுறிகளற்ற மடிநோய் ஒரு பாரம்பரிய மருத்துவத் தீர்வுக்கான ஒளி, ஒலி குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. கால்நடை மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் திலகர் தலைமை வகித்து, மடிநோய் பாதிப்பில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கான பாரம்பரிய மருத்துவ தீர்வு அதற்கான குறுந்தகட்டை வெளியிட்டார்.
துறைத் தலைவர் கலைவாணன் அடங்கிய நிபுணர் குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர். கலந்துரையாடலில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. பேராசிரியர் மேதை நன்றி தெரிவித்தார்.

