ADDED : செப் 07, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-- தேவதானப்பட்டி: நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்கனவு விழா கல்லுாரி முதல்வர் ஜசக் பூச்சாங்குளம் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் ஜோசிபரம் தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங், கவிஞர் அறிவுமதி பங்கேற்றனர்.
தமிழ்கனவு தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினை எடுத்துரைக்கும் விழாவில், மாணவர்கள் கவிதை வாசித்தனர். தமிழகத்தில் உயர்கல்வி முக்கியத்துவம் எடுத்துரைக்கும் விதமாக காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கவிஞர் அறிவுமதியிடம், தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.-