/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்
/
கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்
ADDED : செப் 07, 2025 03:34 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ் 49, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் சக்கம்பட்டியில் உள்ள உறவினர் விசேஷத்திற்காக குடும்பத்துடன் ஆட்டோவில் சென்றார். சக்கம்பட்டி தனியார் பல்க் அருகே மதுரை தேனி ரோட்டில் ஆட்டோ திரும்பிய போது பின்னால் கவனக்குறைவாக சென்ற கார் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காளிதாஸ் அவரது உறவினர்கள் நாகஜோதி 36, மாரியம்மாள் 54, பொம்மியம்மாள் 35, யுக கார்த்திகேயன் 12, கருப்பசாமி 47, விஜயன் 43, ஆகியோர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காளிதாஸ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் கார் டிரைவர் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வைரபிரபு 40, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.