/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உங்கள் சொந்த இல்லம் திட்டம் துவங்க போலீசார் கோரிக்கை
/
உங்கள் சொந்த இல்லம் திட்டம் துவங்க போலீசார் கோரிக்கை
உங்கள் சொந்த இல்லம் திட்டம் துவங்க போலீசார் கோரிக்கை
உங்கள் சொந்த இல்லம் திட்டம் துவங்க போலீசார் கோரிக்கை
ADDED : செப் 07, 2025 03:40 AM
தேனி: போலீசாருக்கான சொந்த வீடு திட்டத்தில் தேர்வானவர்கள் பற்றிய முழு விபரங்களை அறிவித்து வீடுகள் கட்டுமான பணிகளை விரைவாக துவங்க வேண்டும் என போலீசார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மாவட்டத்தில் சொந்த வீடு அமைத்துதர பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன் கொடுவிலார்பட்டியில் சுமார் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் 70 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. துறையில் எஸ்.ஐ., நிலையிலான போலீசாருக்கு 14 வீடுகள், போலீஸ் நிலையிலானவர்களக்கு 56 வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ. 29 லட்சம் முதல் ரூ. 37 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் வீட்டில் விலையில் ஒரு சதவீதத்தை டிராப்ட் எடுத்து விண்ணப்பிக்க தெரிவித்திருந்தனர். ஆனால், திட்டத்திற்கு தேர்வானவர்கள் பற்றிய முழுவிபரம் வெளியிடப்படவில்லை.
எனவே தேர்வானவர்கள் முழுவிபரங்களை வெளியிடவும் வீடுகட்டும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும். தேர்வாகதவர்களுக்கு டிராப்ட் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.