நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ் பூஜாரி 71, அங்குள்ள சோனை முத்தையா கோயிலில் பூஜாரியாக பணி செய்கிறார்.
இரு நாட்களுக்கு முன் இரவு 11.30 மணிக்கு கோயில் திருவிழா மற்றும் அபிஷேகம் முடிந்தபின், கோயிலை பூட்டி சென்று விட்டார். மறுநாள் கோயிலுக்கு சென்று பார்த்த போது கோயிலில் இருந்த உண்டியலை காணவில்லை. ஊர் பொதுமக்கள் உண்டியலை தேடி உள்ளனர். காணாமல் போன உண்டியல் அருகில் உள்ள தோட்டத்தில் உடைந்த நிலையில் கிடந்துள்ளது. அதில் இருந்த பணமும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தர்மராஜ் பூஜாரி கொடுத்த புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.